பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியுள்ள நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இதேவேளை, பங்களாதேஷில் அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்திற்கு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமை தாங்குவதற்கு மாணவர்
அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஷேக் ஹசீனாவின் அரசியல் போட்டியாளரான முஹம்மது யூனுஸ், மைக்ரோ கிரெடிட் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் ஆகிய கருத்துக்களுக்கு
முன்னோடியாக 2006 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
மேலும் இராணுவ ஆட்சியில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று மாணவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த நிலையில் தற்போது லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.