தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சுமார் 100 முறைப்பாடுகள் முன்வைப்பு 

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சுமார் 100 முறைப்பாடுகள் முன்வைப்பு 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த 5ம் திகதி மாலை 5.00 மணி வரையிலான காலப்பகுதியில் 99 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

68 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் மேலாண்மை மையத்திற்கும், 31 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் மேலாண்மை மையங்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது. 

ஜூலை 31ம் திகதி முதல் ஒகஸ்ட் 05ம் திகதி வரையிலான ஐந்து நாட்களுக்குள் பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறுதல் தொடர்பான முறைப்பாடுகள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply