ஜப்பானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் தென் பகுதியிலுள்ள பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரைக்கு அண்மித்த பகுதிகளில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
முதல் நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவிலும், அடுத்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவிலும் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.