‘மின்வெட்டு ஏற்படாது’ – அமைச்சர் உதய

அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்பட்டாலும் இலங்கையில் மின்வெட்டு ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (29/11) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.

நிலக்கரி மற்றும் எண்ணெய்க்கு பணம் செலுத்த டொலர்கள் இல்லாததால், அந்நிய செலாவணி பற்றாக்குறை நெருக்கடியின் காரணமாக நாடு மின்வெட்டு ஏற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், “நாட்டின் மின்சாரத்தில் சுமார் 55% நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது.

மேலும், சேமிப்புக் கிடங்குகளில் 70,000 மெட்ரிக் டொன்கள் இருப்பு உள்ளது, வறட்சி ஏற்பட்டால் இதைப் பயன்படுத்தலாம். மாற்று விகிதங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அடுத்து, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்” என அவர் மேலும் கூறினார்.

'மின்வெட்டு ஏற்படாது' – அமைச்சர் உதய

Social Share

Leave a Reply