ஒமிக்ரொன் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு சர்வதேச அளவில் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது என்றும் இது மிக உயர்ந்தளவில் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் இன்று (29/11) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதற்கமைய சர்வதேச நாடுகள் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும் என்பதோடு, அதிகரித்து வரும் கொவிட் எண்ணிக்கையை மனதில் கொண்டு, அத்தியாவசிய சுகாதார வழிமுறைகளை பேணவும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
புதிய திரிபானது உலகளவில் மிக அதிகமான ஆபத்தை கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்றுவரை, ஒமிக்ரொனுடன் தொடர்புடைய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும் முந்தைய நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக ஒமிக்ரொனின் திறனை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆய்வு தேவைப்படுவதாகவும் சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.