தலிபான் இடைக்கால அரசு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் தங்கள் அரசை தயார் செய்து வருகின்றனர். அதற்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும், சில தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் மேம்படுத்தல்கள் செய்யப்பட்டு வருவதாகவும் தலிபான் பேச்சாளர் ஷபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். முதலில் இடைக்கால அரசை நிறுவி பின்னர் அதில் மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான உரிமைகளோடும், அவர்களுக்கான ஆடை சுதந்திரம் மற்றும் தனியாக வெளியே செல்லும் சுதந்திரம் போன்றவற்றையும் உள்ளடக்கியதாக அரசாங்கம் அமையும் எனவும் அவர் மேலும் அறிவித்துள்ளார். அரசாங்கத்துக்கான அறிவிப்பின்போது துருக்கி, சீனா, ரஸ்சியா, இரான், பாகிஸ்தான்,கட்டார் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தலிபான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தலிபான் இடைக்கால அரசு எந்த நேரத்திலும்  அறிவிக்கப்படலாம்

Social Share

Leave a Reply