பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த சிறுமி, இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாரின் விளக்க மறியல் இம்மாதம் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் மற்றும் வீட்டுக்கு பணிப்பெண்களை வழங்கிய தரகர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 15ம் திகதியன்று , ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் வீட்டுப்பணிப் பெண்ணாக பணியாற்றி வந்த 16 வயது சிறுமி பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்தார். அவர் கடந்த ஜூலை 3 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து 12 நாட்கள் தொடர் சிகிச்சைக்குட்பட்டிந்த நிலையில் உயிரிழந்திருந்தார். டயகம பகுதியைச்சேர்ந்த குறித்த சிறுமி, கடந்த ஒக்டோபர் மாதத்தில் பவுத்தலோகௌ மாவத்தையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட்பதியுதினின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக அழைத்து வரப்பட்டபோது அவருக்கு 15 வயது.
