
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இன்று(14.08) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நாமல் ராஜபக்ச சார்பில் கட்சியின் பொதுச் செயலாளரால் இன்று (14) முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.