தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
வேலுகுமார், உறுதியளித்துள்ளார்.
அவர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, பிளவர் வீதியில் உள்ள அவரது தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
வேலுகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினருமாவார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி அண்மையில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நிலையில் தற்போது வேலுகுமார் தனது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளார்.