முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே, தனது 90வது வயதில் இன்று (30/11) காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததாக அறியமுடிகிறது.
1979ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில், சிறிசேன குரே, கொழும்பு மேயராக கடமையாற்றியுள்ளார்.
அத்துடன், 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ரணசிங்க பிரேமதாஸிவின் அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராகவும், அவர் பதவி வகித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
