
2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கடிதங்கள் உரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ களமிறங்கவுள்ள நிலையில், கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
கட்சி உறுப்பினர்களின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.