பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறவிப்பு இன்று காலை 05 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் காணப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, காலி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நெலுவ, யக்கலமுல்ல, நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹள, ஹொரன, மதுகம மற்றும்
இங்கிரிய பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் 02ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர பிரேதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத்த, கலவான, எஹெலிகொட மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவிற்குட்ட பகுதிகளுக்கும் 02 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் வரகாபொல, யட்டியந்தோட்டை, கோகாலை, தெரணியகல மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் அதுரலிய பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல மற்றும் நிவித்திகல பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply