பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

குடா கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கணிசமானளவு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புளத்சிங்ஹள, பாலிந்தநுவர மற்றும் மதுராவல பிரதேச செயலக பிரிவுகள் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் அதிக அபாயத்தை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply