ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு – சுற்றறிக்கை வெளியீடு 

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு - சுற்றறிக்கை வெளியீடு 

ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளரினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாத கொடுப்பனவை ஒக்டோபர் மாத கொடுப்பனவுடன் வழங்கவுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு, திறைசேரி மற்றும் ஓய்வூதிய திணைக்களம் ஆகிய பிரிவுகளுக்கு குறித்த சுற்றறிக்கையின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கமைய ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

Social Share

Leave a Reply