
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 22 ஆம்
திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிடப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இன்று (18.08) இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அஜித் பி பெரேரா
“ நாட்டுக்கான எமது கொள்கை திட்டத்தை நாம் முன்வைப்போம். சிறந்த அணி எம்மிடம் உள்ளது.
சிறந்த கொள்கையும் எம்மிடம் காணப்படுகிறது. சிறந்த அணியும், நல்ல தலைவர் ஒருவரும் எமக்கு இருக்கிறார்.
எம்மை விட சிறந்த விஞ்ஞாபனத்தையும், சிறந்த அணியையும், சிறந்த தலைவர் ஒருவர் இருந்தால் அவரையும் வெளிப்படுத்தங்கள் என நாம் ஏனைய தரப்புக்கு சவால் விடுக்கிறோம்.
VFS மோசடியால் சுருட்டிக் கொண்ட பணத்தை வைத்து ஜனாதிபதியால் நாட்டு மக்களை அணிதிரட்டிக் கொள்ள முடியாது போயுள்ளது.
ஜனாதிபதி ரணிலின் ரோயல் கல்லூரி நண்பரான விக்ணேஷ்வரன் வடக்கில் வாக்குகளை பெற்றுத் தருவதாக ரணிலுக்கு வாக்குறுதிளித்து விட்டு தற்போது ஏனைய தரப்புகளுடன் இணைந்து பொது வேட்பாரை நிறுத்தியுள்ளார். ரணிலால் வடக்கு மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாது.
ரணிலுக்கு ராஜிதவின் பணம் தேவைப்படாது. VFS மோசடியால் சுருட்டிய பணம் போதியளவு அவர்களிடம் இருக்கிறது. VFS பணத்தாலோ அல்லது ராஜிதவின் பணத்தாலோ ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியாது.
நாம் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவோம். கட்சி மாறும் நடவடிக்கைக்கு முற்றிப்புள்ளி வைத்து புதிய திருத்தத்தை முன்வைப்போம். இது வரை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக மூன்று தீர்மானங்களை முன்வைத்துள்ளன” என தெரிவித்துள்ளார்.