மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய, அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் நுகர்வோருக்கு பற்றாக்குறையின்றி அரிசியினை விநியோகிக்கும் வகையில் ஒரு இலட்சம் மெட்ரிக் டொன் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இதற்கமைய, ஒரு டொன் அரிசி 460 அமெரிக்க டொலர் அடிப்படையில் 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசி மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது.
