முஸ்லிம் மக்களின் விருப்பம் ரணில் விக்ரமசிங்கவே – அலி சப்ரி 

முஸ்லிம் மக்களின் விருப்பம் ரணில் விக்ரமசிங்கவே - அலி சப்ரி 

அனுபவமிக்க ரணில் விக்ரமசிங்கவை விடுத்து, புதிய ஒருவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் முஸ்லிம் மக்களிடையே சந்தேகங்கள் நிலவுவதாக, அவர்களுடன் உரையாடும் போது தெரிந்து கொள்ள முடிந்தததாக அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

கடந்த 2 வருடங்களுடன் ஒப்பிடும் பொழுது தற்பொழுது நிலவும் முன்னேற்றங்ளினால், முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், நேற்று(21.08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். 

கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை மக்கள் தங்களுடைய இனம் மற்றும் மதம் தொடர்பில் சிந்திக்காமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சமாதானம், அச்சமின்றி வாழும் சுற்றுச்சூழல் என்பன நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களின் தேவைகளாக காணப்படுவதாகவும், பெரும்பான்மையான முஸ்லிம்கள் வியாபாரங்களில் ஈடுபடுவதால், அவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் முக்கிய காரணியாக இருப்பதாகவும் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply