தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த விஜய்  

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த விஜய்  

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை கட்சியின் தலைவரான விஜய் இன்று(22.08) அறிமுகம் செய்து கொடியேற்றி வைத்ததுடன்
பாடலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது தவெக தொண்டர்கள் கட்சி உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர். 

பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமை அறிவுறுத்தியிருந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய்யின் மனைவி கலந்து கொள்ளாத நிலையில் இரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Social Share

Leave a Reply