பிரச்சினைகளுக்கு வழமை போன்று தீர்வு காண முடியாது – சஜித்

பிரச்சினைகளுக்கு வழமை போன்று தீர்வு காண முடியாது - சஜித்

நாடு சிக்கி இருக்கின்ற பொறிக்குள் இருந்து மீட்டெடுப்பதற்கு தரவுகளை மையப்படுத்திய பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இளம் தொழிற்றுறையினர் சங்கத்தின் மாநாடு கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் நேற்று மாலை (21.08) இடம்பெற்றது. இதன்போது
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதான கருத்துரையாளராக பங்கேற்றார்.

வழக்கமான கட்டத்துக்குள் இருந்து கொண்டு காலாவதியான பழமை வாதத்துடன் உடைய சிந்தனைகளுக்குள் இல்லாமல் நவீன முறையில் சிந்திக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று நாம் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளோம். அனைத்து திசைகளிலும் பொறிகள் வைக்கப்பட்டுள்ளன
கடன், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, நாட்டின் பொருளாதாரம், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறை என ஒவ்வொரு துறையும் பொறிக்குள் சிக்கி இருக்கிறது. கை குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் தாய்மார்களின் உரிமைகள் மீறப்படுகின்றன.

52 வீதமான பெண்கள் வீடுகளிலும் வீதிகளிலும் வேலைத்தளங்களிலும் அழுத்தங்களுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகியுள்ளனர் .

இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது கல்வியியலாளர்கள் புத்திஜீவிகள் ஆகியோர்களின் கைவிடுதல்களுக்கு மத்தியில் இந்தப் பிரச்சினைகளுக்கு வழமை போன்று தீர்வு காண முடியாது. வழமையான சிந்தனைப் போக்கிலிருந்து வெளியேறி ஆக்கபூர்வமாக சிந்தித்து, தரவுகளையும் சாட்சிகளையும் மையப்படுத்திய கொள்கை திட்டங்களை தயாரித்து நாளுக்கு நாள் அவற்றை நடைமுறைப்படுத்தி, தீர்வு காணப்பட வேண்டும் .

ரணசிங்க பிரேமதாசவின் காலத்திற்குப் பின்னர் நாட்டின் கொள்கை திட்டத்தை கண்காணித்தல், மதிப்பீடு செய்தல், இலக்கு குறித்து ஆராய்ந்து பார்த்தல் மற்றும் குறைபாடுகள் இருப்பின் அதனை சீர்ப்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் இல்லை.

வார்த்தைகளால் அல்லாமல் தொழில்துறை திட்டங்களோடு அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும். முழு நாட்டின் உரிமையை நிர்வாக கட்டமைப்புக்குள் உள்ளவர்களுக்கு பூரண உரிமம் வழங்காது அது தற்காலிக உரிமமாக இருக்க வேண்டும். இந்தத் தற்காலிக உரிமத்தை உயிருக்கும் மேலாக பாதுகாத்து பாதாளத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்தை வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, சட்டத்தரணி திருமதி லிஹினி பெர்னாண்டோவின் நெறியாள்கையில் இடம்பெற்ற கருத்தாடல் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷன ராஜகருணா, மற்றும் ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்

Social Share

Leave a Reply