பிரேசில், ஆர்ஜன்டீனா போட்டி கைவிடப்பட்டது. FIFA கவலை

பிரேசில், ஆராஜன்டீனா அணிகளுக்கான போட்டி ஆரம்பித்ததும் நிறுத்தப்பட்டது. ஆர்ஜன்டீனா வீரர்கள் மூவர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக பிரேசில் மருத்துவ துறை ஊழியர்கள் குற்றம் சாட்டியதனை தொடர்ந்து போட்டி நிறுத்தப்பட்டு கைவிடப்பட்டது. இங்கிலாந்து கழக போட்டிகளில் விளையாடும் நான்கு வீரர்கள் ஆராஜன்டீனா அணியில் விளையாடுவதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் பிரேசில் விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம் சுமத்தினர். இங்கிலாந்தில் இருந்து பிரேசிலுக்கு செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும். ஆனால் குறித்த வீரர்கள் பிழையான தகவல்களை வழங்கியதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
பல லட்சம் பேர் இந்த போட்டியினை எதிர்பாத்திருந்த வேளையில் இந்தப் போட்டி கைவிடப்பட்டமை கவலையளிப்ப்பதாகவும், இவ்வாறான நடவடிக்கைகள் அதிருப்தியளிப்பதாகவும், சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. குறித்த வீரர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அந்த நாட்டு ஒழுக்காற்று குழு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளதென காத்திருபப்தாகவும் FIFA மேலும் தெரிவித்துள்ளது.

பிரேசில், ஆர்ஜன்டீனா போட்டி கைவிடப்பட்டது. FIFA கவலை

Social Share

Leave a Reply