வாகனத்தை காதுகளால் கட்டி இழுத்து சாதனை

வாகனத்தை காதுகளால் கட்டி இழுத்து சாதனை

யாழ்ப்பாணம் – தென்மராட்சியில் 1500 கிலோகிராம் நிறையுடைய வாகனமொன்றைத் தனது
காதுகளால் கட்டி இழுத்து நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் நட்சத்திர மஹால் முன்றலுக்கு அருகில் இன்று காலை அவர் சாதனை படைத்துள்ளார்.

செல்லையா திருச்செல்வம் என்ற நபர் 100 மீற்றர் தூரம் வரை வாகனத்தை காதுகளால் கட்டி இழுத்துச் சென்றுள்ளார்.

முன்னதாக இவர் தனது தாடியால் பல்வேறு வாகனங்களை இழுத்துச் சாதனை புரிந்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Social Share

Leave a Reply