
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 320 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் 11 இஸ்ரேலிய தளங்கள் மற்றும் படைமுகாம்களை இலக்குவைத்து
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டம் முழு வெற்றியுடன் முடிந்ததாக ஹிஸ்புல்லா குழு அறிவித்துள்ளது.
லெபனானில் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் இன்று அறிவித்தது.
காசாவில் ஹமாஸுடன் ஏற்கனவே போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ஹிஸ்புல்லாவால் ஏவப்படும் ஏவுகணைகள் ம
ற்றும் ட்ரோன் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant நாடு முழுவதும் 48 மணி நேர அவசர நிலையை அறிவித்தார்.
லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா, கடந்த மாதம் அதன் தளபதி ஃபுவாட் ஷுக்ரைக் கொலை செய்தமைக்கு ஆரம்ப பதிலடியாக
இஸ்ரேலை நோக்கி பாரியளவிலான ட்ரோன்களை ஏவியது.