சுவிஸிலிருந்து வந்தவர் வவுனியாவில் கொலை. குடுமபத்தினரின் தகவல்

சுவிஸிலிருந்து வந்தவர் வவுனியாவில் கொலை. குடுமபத்தினரின் தகவல்

வவனியா வடக்கு சின்னடம்பன் பகுதியில் உள்ள வீடொன்றில் சுவிற்சலாந்திலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்து பூந்தோட்டம் பகுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் தலையில் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (26.08) அதிகாலை இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொலையுண்ட 66 வயதான விமலநாதன் எனும் நபர் சுவிஸிலிருந்து விடுமுறையில் வருகை தந்து பூந்தோட்டம் பகுதியிலுள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று பகல் வேளையில் அவரது உறவினர் என நம்பப்படும் சின்னடம்பன் பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்த நபரை அந்த பகுதியிலுள்ள ஐயப்பன் ஆலய திருவிழாவுக்கு செல்வோம் என அழைத்துச் சென்றுள்ளார். திருவிழா நிறைவடைந்ததும் சின்னடம்பன் கிராமத்திலுள்ள வீடொன்றில் சுவிஸிலிருந்து வந்த இறந்தவரின் நண்பரான இன்னுமொருவருடனும் இணைந்து மது அருந்திவிட்டு இருவரும் நித்திரைக்கு சென்றுள்ளனர். சுவிஸிலிருந்தது வருகை தந்த மற்றைய நபரும், இறந்தவரும் அந்த நாட்டிலேயே நண்பர்கள் எனவும், நீண்ட காலமாக பழக்கமானவர்கள் எனவும் மேலும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காலை வேளையில் சுவிற்சலாந்தில் வந்த மற்றைய நபர் இறந்தவரின் உறவினர்களுக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த நபர் இறந்துள்ளதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. குடும்பத்தினரின் தகவற்படி அவருடன் இருந்தவர் நீண்ட தூரத்துக்கு அப்பால் எடுத்துச் சென்று வீசப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. மது போதையில் தான் உறங்கிவிட்டதாகவும், அதன் பின்னர் என்ன நடந்தது என தனக்கு தெரியாது எனவும், காலையில் தான் எழுந்து பார்த்துவிட்டு குறித்த இடத்துக்கு மீண்டும் வந்ததாகவும் அப்போதே சம்பவம் தொடர்பில் தெரிந்து கொண்டதாகவும் குறித்த நபர் கூறியுள்ளார்.

இறந்தவரிடம் பெரும் தொகை பணம் காணப்பட்டதாகவும், அவை கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், அத்தோடு கடவுச்சீட்டும் திருடப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் தங்க நகைகள் அணிந்திருந்ததாகவும், அவை எவையும் திருடப்படவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளனர். இறந்தவர் மிக மோசமாக தாக்கப்பட்டிருந்ததாக, உடலை பார்வையிட்ட இறந்தவரின் சகோதரி கூறியுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைவாக, இறந்தவரின் உறவினரான 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடற்கூற்று பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply