கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி ஜூலை மாதத்தை விட ஒகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜூலை மாதத்தில் 2.4 சதவீதமாகப் பதிவான பணவீக்க வீதம் ஒகஸ்ட் மாதத்தில் 0.5 வீதமாகக் குறைவடைந்துள்ளது.
மேலும் ஜூலை மாதத்தில் 1.5 சதவீதமாகப் பதிவான உணவுப் பணவீக்கம் இந்த மாதம் 0.8 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.
அத்துடன் உணவு அல்லா பணவீக்கமும் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் குறைவடைந்துள்ளது.
இதன்படி, ஜூலை மாதத்தில் 2.8 சதவீதமாகப் பதிவான உணவு அல்லா பணவீக்கம் இந்த மாதம் 0.4 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.