டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவினரால் சந்தேக நபர் இன்று (01.09) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 20,000 சட்டவிரோத சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.