தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் எரிபொருள் விலையை 150 ரூபாவாக குறைப்பதற்கே முன்னுரியளிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளரும்,
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியாகும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி,
2022 ஆம் ஆண்டில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 36 பில்லியன் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே இலஞ்ச
ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் எரிபொருள் விநியோகம் இலங்கையில் மிகப்பெரிய மோசடிக்கு வழிவகுத்தது, இதற்கும் அரசியல்வாதிகள் மற்றும் உயர்
பதவியில் உள்ள அரசு அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது.
2022 ஆம் ஆண்டு எரிபொருள் விலையை 200 ரூபாவினால் குறைக்கலாம் என நான் கூறினேன்.இப்போது 150 ரூபாவாக குறைக்க முடியும்.
நான் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் மாதத்திற்குள் இதனை நடைமுறைப்படுத்துவேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.