
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவுக்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தது.
இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திற்கு சஜித் பிரேமதாச தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.
‘உங்கள் ஆதரவுக்கு நன்றி, அனைவருக்கும் வெற்றி தரும், இனவாதங்கள் இல்லாத பாகுபாடுகள் இல்லாத மற்றும் ஐக்கியம், பலம், பகிரப்பட்ட நோக்கங்கள் உடனான எதிர்காலத்தை உருவாக்குவோம்” என பதிலளித்துள்ளார்.