வேலுகுமார் தொடர்பான அவதூறு கருத்துகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வேலுகுமார் தொடர்பான அவதூறு கருத்துகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் முகநூல் பக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (05.09) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார், ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு
ஆதரவளிப்பதாக அண்மையில் அறிவித்தார்.

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்று ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பான காணொளி அவரது முகநூல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிடப்பட்டிருந்தன.
இந்த குற்றச்சாட்டை நிராகரித்த வேலுகுமார், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வேலுகுமார் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிவேந்திரன்,
கனிஷ்ட சட்டத்தரணி சிவானந்தராஜா உள்ளிட்ட சட்டக்குழுவினர் முன்னிலையாகினர்.

இதன்போதே தயாசிறி ஜயசேகரவின் உரையை சமூக வலைத்தளங்களில் வௌியிடுவதற்கு தடை விதித்து இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வேலுகுமாருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளும்
இடம்பெற்றுவருகின்றன என்று அவரின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply