வவுனியாவிலும் வெடிப்பு சம்பவம் பதிவு

நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகி வந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களை அடுத்து வுவனியாவிலும் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வவுனியா, வேரகம பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலேயே நேற்று (01/12) எரிவாயு அடுப்பொன்று இவ்வாறு வெடிப்புக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டிலிருந்த பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தான் சமையல் செய்து முடித்த பின்னர் ​​அணைத்து வைக்கப்பட்டிருந்த அடுப்பே திடீரென வெடித்ததாகவும், அத்துடன் மேலதிக பாதிப்புகள் ஏற்படாதிருக்கும் நோக்கில் எரிவாயு கொள்கலனில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டரை அகற்றியதாகவும் கூறினார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இரட்டைபெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை காலி – எல்பிட்டி பிரதேசத்திலும் நேற்று எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அதற்கமைய நாட்டில் இதுவரை 20 க்கு மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

வவுனியாவிலும் வெடிப்பு சம்பவம் பதிவு

Social Share

Leave a Reply