சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்த ஐரோப்பியத் தேர்தல் கண்காணிப்புக் குழு

சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்த ஐரோப்பியத் தேர்தல் கண்காணிப்புக் குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மன்னாரிற்கு நேற்று(11.09) வருகை தந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் மற்றும் சூழ்நிலைகள் தொடர்பாகப் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டச் செயலாளர் ஜஸ்ரின் துரமும் கலந்து கொண்டார்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply