சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை விநியோகிக்கும் மற்றும் பெறுபவர்களின் வங்கிக் கணக்குகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சகல புலம்பெயர் இலங்கையர்களும் தங்கள் பணத்தை திருப்பி அனுப்ப சட்டப்பூர்வ வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, புலம்பெயர் தொழிலாளர்கள் தமது பணத்தை இலங்கையில் மாற்றும் போது, டொலர் ஒன்றிற்கு மேலதிகமாக 10 ரூபாவை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து இந்த சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.