‘ஒமிக்ரொன் நாட்டிற்குள் நுழையாது’

ஒமிக்ரொன் இலங்கைக்குள் நுழைந்து அழிவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் ஒருபுறமாக இருந்தாலும், விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழையக்கூடிய அனைத்து வழிவகைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (02/12) தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொவிட் தொற்றாளர் நாட்டிற்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, விமான நிலையங்களில் பலவிதமான பாதுகாப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “பயணிகளின் PCR அறிக்கை எதிர்மறையாக இருந்தால் மாத்திரமே, விமானத்தில் ஏற முடியும். மேலும் பயணிகள் விமான நிலையத்திற்கு வரும் போது 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட எதிர்மறை PCR அறிக்கையை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.

முழு தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் PCR சோதனை அறிக்கை எதிர்மறையாக உள்ளவர்கள் மட்டுமே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

மற்ற ஒவ்வொரு பயணிகளும் சிகிச்சை அல்லது தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என அவர் மேலும் விளக்கமளித்தார்.

‘ஒமிக்ரொன் நாட்டிற்குள் நுழையாது'

Social Share

Leave a Reply