
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(15.09) நடைபெறவுள்ளது.
பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் இம்முறை 3,23,879 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். தமிழ் பிரிவில் 79000 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 2849 பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. காலை 9 மணிக்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு சமுகமளிக்க வேண்டுமென மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் கடந்த 12ம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நிலையத்திற்குள் வெளியாட்கள் பிரவேசிக்க இடமளிக்கப்படமாட்டாது என்பதுடன் பரீட்சைக்குத் தேவையான பேனா, பென்சில் மாத்திரமே பரீட்சார்த்திகள் எடுத்துச் செல்ல முடியும்.