மக்கள் விடுதலை முன்னணியின் உண்மையான தேர்தல் விஞ்ஞாபனம் மறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த மறைக்கப்பட்ட ஆவணத்தில், இரகசிய பொலிஸ், பொலிஸ், முப்படைய மற்றும் அதனுடன் தொடர்புடைய படைகளைக் கலைப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளதாக, கொழும்பில் இன்று(15.09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு பாதுகாப்பு அமைச்சுக்குப் பதிலாக, மக்கள் விடுதலை முன்னணியினரை உள்ளடக்கிய தேசியப் பாதுகாப்பு ஆணைக்குழுவைக் கொண்டு வருவதாகவும் குறித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்று, இலவச கல்வி என்கின்ற பெயரில் தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி மாணவர்களை ஒன்று திரட்டியது. ஆனால் இன்று தனியார் கல்வியை முறைப்படுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணி கூறுவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.