ஜனாதிபதி எப்போதும் தேர்தலுக்காக அன்றி நாட்டு மக்களுக்காகவே செயற்பட்டார் – கோகிலா

ஜனாதிபதி எப்போதும் தேர்தலுக்காக அன்றி நாட்டு மக்களுக்காகவே செயற்பட்டார் - கோகிலா

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எப்போதும் தேர்தலை இலக்காகக் கொள்ளாமல் நாட்டு மக்களுக்காகவே செயற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று (16.09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு
அவர் இதனைக் கூறினார்.

நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றால் அரசியல் தீர்மானங்களை எடுக்கக் கூடாது என ஜனாதிபதி உறுதியாக நம்பியதாகவும் அவர் கூறினார்.

திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ் “பிளேன்டி” குடிக்குமாறும், துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுமாறும் விஜித ஹேரத் எச்சரிப்பதாகவும்,
திசைகாட்டி வெற்றி பெற்றால், 2022 ஆம் ஆண்டில் நாடு இருந்த நிலைக்கு மீண்டும் திரும்ப நேரிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று பொருளாதார ரீதியாக ஸ்திரமாகிவிட்ட நாட்டை திசைகாட்டிக்கு வாக்களித்து பின்னோக்கித் திருப்ப வேண்டாம் என
மக்களைக் கேட்டுக்கொண்ட அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக
அமுல்படுத்தப்பட வேண்டுமாயின் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி அவருக்கு தெளிவான வெற்றியை வழங்க வேண்டும்” என அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

Social Share

Leave a Reply