ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மன்னாரில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள நிலையில் மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன.
முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் வருகையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்
நிர்மலநாதன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சோதனை சாவடி அகற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இருப்பினும் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டு ஒரு வார காலத்தில் மீண்டும் சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதியின் வருகையால் பிரதான பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் அடையாளம் தெரியாத வகையில் வீதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.