தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவு – விசேட போக்குவரத்து திட்டம் அமுலில்

தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவு - விசேட போக்குவரத்து திட்டம் அமுலில்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரச்சார பணிகளுக்கு இன்று(18.09) நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரச்சாரம், பேரணி, துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய இறுதிப் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று(18.09) நடைபெறவுள்ளன.

கொழும்பு நகரம், கொட்டாவ மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரச்சார கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் விசேட போக்குவரத்து திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply