இலங்கை எதிர் நியூசிலாந்து: நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி  

இலங்கை எதிர் நியூசிலாந்து: நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி  

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின், முதலாவது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் இன்று(18.09) இந்த போட்டி ஆரம்பமாகியது.

இந்த போட்டிக்கான இலங்கை அணி நேற்று(17.09) அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கையின் துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தின் போது நான்காவதாகக் களமிறங்கிய தினேஷ் சந்திமல் மூன்றாவதாகக் களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமிந்து மென்டிஸ் ஐந்தாவதாகக் களமிறங்கவுள்ளதுடன், கடந்த தொடரின் போது மூன்றாவதாக துடுப்பெடுத்தாடிய குசல் மென்டிஸ், இம்முறை ஏழாவது இடத்தில் துடுப்பெடுத்தாடவுள்ளார்.

அணியின் துடுப்பாட்ட வரிசையின் ஒழுங்கு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள போதும், புதிய வீரர்கள் எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை.  

பிரபாத் ஜயசூரிய மற்றும் ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாகவும், அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை XI: திமுத் கருணாரத்ன, பத்தும் நிசங்க, தினேஷ் சந்திமல், அஞ்சலோ மெத்தியூஸ், கமிந்து மென்டிஸ், தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்),  குசல் மென்டிஸ், ரமேஷ் மென்டிஸ், பிரபாத் ஜயசூரிய, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ

நியூசிலாந்து XI: டாம் லாதம், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி(அணித் தலைவர்), அஜாஸ் படேல், வில்லியம் ஓர்ர்கே

இன்று ஆரம்பமாகும் இந்த போட்டி வழமைக்கு மாறாக ஆறு நாட்கள் நடைபெறவுள்ளது. போட்டியின் போது 21ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதால், அன்றைய தினம் ஆட்டம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply