தேர்தல் சட்ட மீறல்கள் – விசேட எண்கள் அறிமுகம்

தேர்தல் சட்ட மீறல்கள் - விசேட எண்கள் அறிமுகம்

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி எண்களை தேர்தல் சர்ச்சைகளுக்கான தீர்வு பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த எண்கள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த இலக்கங்கள் வாக்குப்பதிவின் போது இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் குறித்து முறைப்பாடளிக்க உதவுகின்றன.

மேலும் இவ்வாறான சம்பவங்களுக்கு இராஜகிரிய பொதுத் தேர்தல் செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவை தொடர்பு கொள்ளுமாறு ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்தல் சட்ட மீறல்கள் - விசேட எண்கள் அறிமுகம்

Social Share

Leave a Reply