இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 வருடத் தடை விதித்த அவுஸ்ரேலியா

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 வருடத் தடை விதித்த அவுஸ்ரேலியா

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநில மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளருமான துலிப் சமரவீரவின் முறையற்ற நடத்தை காரணமாக, அவுஸ்ரேலியா கிரிக்கெட்டில் பதவிகளை வகிப்பதற்கு 20 வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநில மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாராகச் செயற்பட்டு வந்த 52 வயதான துலிப் சமரவீர, நடத்தை விதிமுறைகளை மீறியதை அவுஸ்ரேலியா கிரிக்கெட் உறுதி செய்துள்ளது.  

விளையாட்டில் பங்கேற்கும் அனைவரது பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

துலிப் சமரவீரவின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவுஸ்ரேலிய கிரிக்கெட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply