பாராளுமன்ற தேர்தல் நவம்பர் இறுதிக்குள்?  

பாராளுமன்ற தேர்தல் நவம்பர் இறுதிக்குள்?  

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ் வருடம் நவம்பர் மாத இறுதிக்குள் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை அறிவிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். இருப்பினும், பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் காலத்தை அவர் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படும் எனத் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான பிமல் ரத்நாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்த வாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால், எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னாள் தேர்தல் கண்காணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளமைக்கு அமைய, இலங்கை சட்ட விதிமுறைகளின் படி கீழ் வரும் கால அட்டவணையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

  • பாராளுமன்றம் கலைப்பு / தேர்தல் அறிவிப்பு: செப்டம்பர் 25
  • வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலம்: ஒக்டோபர் 4 நிறைவு
  • தேர்தல் திகதி உத்தியோகபூர்வ அறிவிப்பு: ஒக்டோபர் 7
  • தேர்தல் திகதி: நவம்பர் 22 முதல் நவம்பர் 30ம் திகதிக்குள் (பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 52 முதல் 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்)

Social Share

Leave a Reply