தற்சமயம் கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அத்துடன் நாடு முழுவதும் மின் விநியோகத்தை சீர் செய்வதற்கு சுமார் 3 மணித்தியாலங்கள் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திய செய்தி
நாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
எனினும் மீண்டும் மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.நாட்டில் தொடர்ச்சியாக மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
