யாழில் மேலுமொரு வெடிப்பு சம்பவம்

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று நேற்று (02/12) பதிவாகியுள்ளது.

கோப்பாய் தெற்கு இருபாலையில் உள்ள வீடொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீரென எரிவாயு அடுப்பு தீப்பற்றியதை அவதானித்த வீட்டின் உரிமையாளர், உடனே அயலவர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்ததாக தெரிவித்தார்.

இதனால் பாரிய சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழில் மேலுமொரு வெடிப்பு சம்பவம்

Social Share

Leave a Reply