எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை காலத்தை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இம்மாதம் 24ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறை, அடுத்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 23ஆம் திகதிக்கு பின்னர், ஜனவரி மாதம் 3ஆம் திகதி பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
