முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை மீள வழங்குமாறு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை மீள வழங்குமாறு அறிவிப்பு

அரசாங்கத்தினால் முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு முன்னாள் அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் நேற்று(26.09) அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு சுமார் 50 உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், மடிவெல வீடமைப்புத் தொகுதியில் வசிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தல் முடியும் வரையில், குறித்த இல்லங்களைப் பயன்படுத்துவதற்கு பொது நிர்வாக அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply