இலங்கை அணி 164 ஓட்டங்களினால் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி வெள்ளையடிப்பு முறையில் முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று (03/12) இடம்பெற்றது.

போட்டியில் 297 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் Nkrumah Bonner 44 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததுடன், பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் Lasith Embuldeniya மற்றும் Ramesh Mendis ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 345 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 155 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

அதற்கமைய, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி 164 ஓட்டங்களினால் வெற்றி

Social Share

Leave a Reply