கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – முதலிடத்தில் காலி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை - முதலிடத்தில் காலி

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி மல்ஷா குமாரதுங்க, நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் குலுனி மெட்சரா மற்றும் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் விமன்சா ஜயனதி ரத்னவீர ஆகியோர் பெற்றுள்ளனர்.

இந்த வருடத்தின் பெறுபேறுகளின்படி மூன்று மாணவிகள் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரியின் செஷானி செஹங்சா ஜயவர்தன, நுகேகொட அனுலா கல்லூரியின் மெதுகி சமோதி பெரேரா மற்றும் காலி சங்கமித்த மகளிர் கல்லூரியின் நதுன் பமுதிதா ரணவக்க ஆகியோர் நான்காம் இடத்தை பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏழாவது இடத்திற்கு நான்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நுகேகொட அனுலா வித்தியாலயத்தைச் சேர்ந்த நெமதினி வொனாரா அதிகாரி, கம்பஹா ரத்னாவலி மகளிர் கல்லூரியின் தத்சரா கவிந்தி, பாணந்துறை ஸ்ரீ சுமங்கல மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தமாஷி தனஞ்சனா விக்ரமகே மற்றும் மாத்தறை ராகுல வித்தியாலயத்தைச் சேர்ந்த சகுண சதீஷான் சமரவிக்ரம ஆகியோர் ஏழாவது இடத்துக்கு தேர்வாகியுள்ளனர்.

மேலும் 244, 228 மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்திற்கு தகுதிப்பெற்றுள்ளனர். இது 75.72 சதவீதம் ஆகும்.

அத்துடன் 13,309 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் “9A” சித்தி பெற்றுள்ளதுடன் இது 4.13 சதவீதம் ஆகும்.

இதேவேளை, 2.12 சதவீத மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.

Social Share

Leave a Reply