அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிரதமரான கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படும் வரை அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த மாதம் 09ஆம் திகதி அரசியலமைப்பு சபை கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் சாகர காரியவசம் மற்றும் சிவில் உறுப்பினர்கள் மூவர் அரசியலமைப்பு சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்.