
2024ம் ஆண்டிற்கான 19 வயதிற்குட்பட்ட பாடசாலை கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்வில் கொழும்பு புனித ஆசிர்வாதப்பர் கல்லூரியின் கிரிக்கெட் அணித் தலைவர் சாருஜன் சண்முகநாதன் தேசிய மட்டத்தில் சிறந்த களத்தடுப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
களத்தில் சிறப்பாகச் செயற்பட்டமை மற்றும் சிறந்த தலைமைத்துவத்தினூடாக சாருஜன் சண்முகநாதன் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
அவருடைய இந்த விருதுக்குக் கொழும்பு புனித ஆசிர்வாதப்பர் கல்லூரி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
சாருஜன் சண்முகநாதன் தற்பொழுது 19 வயதிற்குட்பட்ட இலங்கை அணியிலும் முக்கிய வீரராகச் செயற்பட்டு வருகின்றார்.