மின்சார தடங்கல் ஏற்பட்டதற்கு தொழிற்சங்க நடவடிக்கையே காரணம் என இலங்கை மின்சாரசபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
நாடுபூராகவும் மின்சாரத்தினை சீர் செய்த போதும் தனக்கெதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாகவும் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மின்சார சீராக்கலுக்கு இராணுவத்தினரை உதவிக்கு அழைத்ததனை மறுத்த அவர் மின்சார சபை பொறியியலாளர்கள் மின்சாரத்தை மீள வழங்கியதாகவும், ஆனால் அதனை அவர்கள் தாமதித்தே செய்ததாகவும் இலங்கை மின்சாரசபை பொது முகாமையாளர் தெரிவித்தார்.
சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை தாம் கைவிட்டுளளதாக பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 12 ஆம் திகதி மின்சாரசபை தலைமையகத்தில் இரு ஊழியர்களை பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பில் பொறியியலாளர்கள் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை சுட்டிக்காட்டதக்கது.
தங்கள் உள்ளக பிரச்சினைகள் காரணமாக மக்களுக்கான சேவைகளை துண்டித்து, மக்களை மோசமான கடின நிலைக்கு தள்ளியுள்ளார்கள் என்பது அல்லது துரித கதியில் சீர்செய்யவில்லை என்பது மிக மோசமான செயற்பாடு.
தொடர்புடைய செய்தி